உன் அப்பாவ பாத்தாலும் பயம்,உன் அம்மாவ பாத்தாலும் பயம்,உன் அண்ணன பாத்தாலும் பயம்-னுதனுஷ் பாடினாரு.எனக்கு உன்ன பாத்தாலே பயமா இருக்குடி பொண்ணே!
=======================
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்-னுஅரசாங்கம் சொன்னதும், சர்தார்ஜி தன்வீட்ல இருந்த ஒரு மரத்தை வெட்டிட்டாரு... ஏன் தெரியுமா? அவர் வீட்ல இருந்தது ரெண்டு மரம்!
======================
மாப்பிள்ளை,
E=MC2... இது ஐன்ஸ்டீன் ஃபார்முலா.ஈஈஈனு பல்லைக் காட்டி MC கட்டிங் அடிப்பது உன்னோட ஃபார்முலா!
=====================
டிங்டாங் கோயில் மணி கோயில் மணி... நான் கேட்டேன்!
தெரியும்டா, அப்பத்தான உண்டகட்டி சோறு
போடுவாங்க... உன்னப்பத்தி தெரியாதா?
=======================
ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்
நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்
பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.
சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.
ஆனா... இதெல்லாம் தேவையே இல்லை.
நான் எதையுமே பிச்சை எடுத்துதான்
சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே!
============================
என்ன மாமூ...
புதுசுபுதுசா தினுசுதினுசா
இவ்வளவு பர்ஸ்-வெச்சிருக்கே.
ஒருவேளை கண்டதும் சுட உத்தரவு-னு
பேப்பர்ல போட்டிருந்த செய்தியை
நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!
_________________
1 கருத்துக்கள்:
இப்படி எல்லாம் சிந்தித்து சிரிக்க வைக்க ரூம் போட்டு டிஸ்கஸ் செய்வாங்க போல நல்லா இருக்கப்பா.
மாடம்பக்கம் மோகன்குமார் சென்னை.73
Post a Comment