"மச்சான்..டேய்..நீ சிரிச்சா ரஜினி!...பேசினா வைரமுத்து!!...ஆடுனா பிரபுதேவா!!!...பாடுனா ஜேசுதாஸ்!!!!..படுத்தா உசிலைமணி வெயிட்டைக் குறைடா மாப்ளே "
"மச்சான்!நீ அகநானூறைக் கரைச்சுக் குடிச்சவன்தான்..ஒப்புக்கறேன்..நீ புறநானூறைப் படிச்சு கிழிச்சவன்தான்...ஒப்புக்கறேன்!ஆனா என்னோட பணம் முழுசா நானூறை முழுங்கி ஏப்பம் விடுட்டியேடா...நீ நல்லா இருப்பியா?"
"நான் துண்டை கையில் எடுத்தா குளிக்கப் போறேன்னு அர்த்தம்...துண்டைக் கழுத்தில் போட்டால் ஊருக்குப் போறேன்னு அர்த்தம்...துண்டை இடுப்பில் கட்டினால் கோயிலுக்குப் போகிறேன்னு அர்த்தம்...துண்டை தலையில் போட்டால் கடன் கேக்கிறேன்னு அர்த்தம்!"
"நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!"
"நேத்து உன்னைப் பாக்க உன் ரூமுக்கு வந்தேன்.நல்ல வெயில்நேரம்...ஃபேன்கூட இல்லாத ரூமில் குப்புறப்படுத்து தூங்கிட்டிருந்தே..சரி சரி...புரியுது!எருமையால மல்லாக்கப் படுக்கமுடியாதே!!"
"அன்புக் காதலா...என்னைவிட்டு நீ ரொம்ப தூரம் போயிட்டாலும்,..என்னைச் சந்திக்கவே வரலைன்னாலும்,..போன்கூட பன்னலைன்னாலும்,..எத்தனை வருசமானாலும் சரி...மறக்கமுடியுமா உன்னை???நான் முதன்முதலில் பார்த்த குரங்கு நீதானே?!"
"அன்பே...நான் சூரியன்...நீ நிலா! நிலா சூரியன்கிட்டேயிருந்து வெளிச்சத்தை வாங்கும்.நீ என்கிட்டயிருந்து பணம் வாங்குவே!...ஆனா ரெண்டு பேருமே திருப்பித் தரமாட்டீங்க!"
"அன்பான உன் ஆலோசனைக்கு மிக்க நன்றி!அது சரி..முடிஞ்சவன் சாதிக்கிறான்...முடியாதவன் போதிக்கிறான்!"
4 கருத்துக்கள்:
குறுந்தகவல் குறும்பு வயிறை வலிக்கச் செய்தது :))
nalll sirichom
Congrates.very good.pl continue
jeyarajan.m
thanks
Post a Comment