*ஓரணா ரெண்டணா உண்டியலை உடைச்சு
நாலணா எட்டணா கடனை உடனை வாங்கி
அண்டா குண்டா அடகு வெச்சு
பிரிபெய்டு கார்டு வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்
பதில் அனுப்புறது...?
****************************
*கவலைகள் உன்னை நோகடிக்கும் பொழுது
உன்விழி ஓரம் ஒரு துளி நீர் சிந்தும் பொழுது
என்னிடம் சொல்...
நான் உனக்காக அங்கு வருவேன்!
காரணம் நான் டிஸ்யூ விற்கிறேன்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்!
****************************
*அன்பே... உன்னைப் பார்க்கும்வரை நான் நானாக இருந்தேன்.
உன்னைப் பார்த்த பின்பு கடன்காரனாக ஆகிவிட்டேன்.
****************************
*அன்புக்கு அம்மா, ஆத்திரத்திற்கு அப்பா.
சிந்திப்பதற்கு நான், பைத்தியக்காரன்மாதிரி சிரிப்பதற்கு நீ!
****************************
*உன்னைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என
துடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் டிக்கெட் எடுத்தால்தான் மிருகக் காட்சிச்
சாலைக்குள் விடுவேன் என்று சொல்கிறார் காவல்காரர்!
****************************
*சத்தியமாகச் சொல்கிறேன்... உன்னை விட்டால் யாருமில்லை..
எனக்குக் கடன் கொடுப்பதற்கு!
****************************
*நீ வானொலியில் பாடினால் எனக்கு அதிக மகிழ்ச்சி!
அடைத்துவிடவும் வசதி.
இப்படி நேரில் கொல்கிறாயே நண்பா...
****************************
*கண்ணீர்விட மாட்டேன்
கண்ணுக்குள் இருக்கும் நீ
மூழ்கிவிடுவாய் என்பதால்!
****************************
*இதயத்தைக் காணவில்லை!
திருடியது நீ...
இல்லை என்றால் உனது
தங்கையாக இருக்கும்!
****************************
3 கருத்துக்கள்:
இப்படி எல்லாம் சிந்தித்து சிரிக்க வைக்க ரூம் போட்டு டிஸ்கஸ் செய்வாங்க போல நல்லா இருக்கப்பா.
மாடம்பக்கம் மோகன்குமார் சென்னை.73
In this busy world...,u have time to think for very funny sms...,really good..,keep it up.
TAMILSELVAN from kovai.
It is really very nice
Thank you
Post a Comment